

நான் ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்ற போது சல்மான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவரது தலையிலும், நெற்றியிலும் ஊசிகள் குத்தப்பட்டு இருந்தது.
பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகரான சல்மான் கான் 60 வயதிலும் இளம் நடிகர்களுக்கு நிகராக பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வயதானவராகவும், சோர்வாகவும் காணப்பட்ட அவரது புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதை தொடர்ந்து அடுத்த நாளே தனது ‘பிட்டான’ உடலமைப்பை வெளியிட்டு ரசிகர்களை நிம்மதி அடைய செய்தார்.
60 வயதிலும் தனது இளமைக்காக சல்மான்கான் செய்யும் தியாகங்களையும், வலிகளையும் பற்றி அவரது நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான சைலேந்திர சிங் கூறுகையில்,
‘60 வயதிலும் சல்மான்கானுக்கு முடி கொட்டவில்லை. அவரது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் உள்ளது. இதற்காக கடினமான பிளேட்லெட்ரிச் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
நான் ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்ற போது சல்மான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அவரது தலையிலும், நெற்றியிலும் ஊசிகள் குத்தப்பட்டு இருந்தது. அந்த வலியை பொருட்படுத்தாமல் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். ஒரு திங்கட்கிழமை நான் சல்மான்கான் வீட்டிற்கு சென்ற போது சாப்பாட்டு அறையில் இருந்தார்.
அவருக்கு முன் ஒரு கண்ணாடி இருந்தது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. அவரது தலையில் ஊசிகள் குத்தப்பட்டு இருந்தது. அப்போது அவரிடம் கண்ணாடி வழியாகதான் பேச முடியும். அந்த நிலையிலும் அனைவருடனும் பேசுவார். விருந்து கொண்டாடுவார். இளமை தோற்றத்திற்காக இது போன்று சில மருத்துவ சிகிச்சைகளையும் சல்மான்கான் மேற்கொண்டுள்ளார் என்றார்.