பயமறியா பிரம்மை படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகிறது

இசைப்பாளருடன் இணைந்து ஹிப்பாப் தமிழா ஆதி வெளியிடுகிறார்.21-ந்தேதி வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகிறது.
பயமறியா பிரம்மை படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகிறது
Published on

69 எம்எம் ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பில் ராகுல் கபாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பயமறியா பிரம்மை". இந்த படத்தில் ஜேடி கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.

படம் நாளைமறுநாள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு சாம்பல் நிற கனவுகள் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியிடப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் மற்றும் நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்பாப் தமிழா ஆதி ஆகியோர் வெளியிடுகின்றனர்.

இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கனேஷ், ஹிரிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெரோனிகா பாடல்களை எழுதியுள்ளார். இந்த படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் டிரைலரை கடந்த 14-ந்தேதி விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com