அரண்மனை 5 திரைப்படத்தை குறித்து வந்த தகவல் பொய் - விளக்கம் கொடுத்த குஷ்பு

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், கதாநாயகனாவும் இருப்பவர் சுந்தர்.சி.கடந்த 2014-ம் ஆண்டு நகைச்சுவை மற்றும் திகில் கொண்ட 'அரண்மனை' படத்தை சுந்தர் சி. இயக்கினார்
அரண்மனை 5 திரைப்படத்தை குறித்து வந்த தகவல் பொய் - விளக்கம் கொடுத்த குஷ்பு
Published on

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், கதாநாயகனாவும் நடிப்பவர் சுந்தர்.சி. இவர் 'முறைமான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நகைச்சுவை மற்றும் திகில் கொண்ட 'அரண்மனை' படத்தை சுந்தர் சி. இயக்கினார். இதில் சுந்தர் சி, வினய், ஹன்சிகா மோட்வானி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அரண்மனை-2, அரண்மனை-3 மற்றும் அரண்மனை-4 ஆகிய படங்கள் வெளிவந்தன.

இந்தாண்டு வெளியான அரண்மனை -4 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் கோடிகளை அள்ளியது. இந்த நிலையில் சமீபத்தில் அரண்மனை 5 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான போஸ்டர் போலவும், அப்படத்தில் யார் நடிக்கிறார்கள் இசையமைப்பாளர் என்ற செய்திகள் அடங்கியிருந்தது. அதையெல்லாம் அதிகாரப்பூர்வ தகவல் என நினைத்து சமூக வலைத்தளங்களில் பரவப்பட்டது.

ஆனால் இந்த செய்தி அனைத்தும் பொய், உண்மைத்தன்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பு இன்று பதிவிட்டுள்ளார். அதில் " அரண்மனை 5 குறித்து வெளிவந்த அனைத்து செய்திகளும் பொய். இது தொடர்பாக யார் படமாக எடுத்தாலும் அப்பொழுது அவர்களுக்கான பதிலை நாங்கள் கொடுப்போம்." என கூறியுள்ளார்.

இயக்குனர் சுந்தர்.சி. தற்போது வடிவேலுவை வைத்து 'கேங்கர்ஸ்' படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com