மொத ராத்திரியுடன் மோதும் ரியோ ராஜின் ‘ராம் இன் லீலா’!

நேற்று இப்படத்தின் செப்பு சிலை பாடல் வெளியானது.
மொத ராத்திரியுடன் மோதும் ரியோ ராஜின் ‘ராம் இன் லீலா’!
Published on: 

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோராஜ், அறிமுக நாயகி வர்த்திகா நடிக்கும் காதல் திரைப்படம் ராம் இன் லீலா.

ரியோராஜின் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முனிஷ்காந்த், சேத்தன், தீபா வெங்கட், மாளவிகா அவினாஷ், நயனா எல்சா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில், படம் குறித்த அறிவிப்பு வீடியோ, பாடல்கள் மற்றும் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் படம் ஆக.21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ள மொத ராத்திரி படத்துடன் மோதுகிறது. அப்படமும் ஆக.21ம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com