அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே..!- ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே..!- ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்
Published on

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார்.

நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது.

பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை.

உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே..

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com