

ஆர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009ல் வெளியான திரைப்படம் 'ரேணிகுண்டா'
சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பித்து ஆந்திராவை அடையும் ஐந்து இளைஞர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்று கிளாசிக் அந்தஸ்து பெற்றது.
தற்போது ரேணிகுண்டா' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'ரேணிகுண்டா 2' உருவாகி வருகிறது. பன்னீர்செல்வம் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குவது மட்டுமல்லாமல், தயாரிக்கவும் செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷமி திலகன், நிஷாந்த், கனிஃபா, தமிழ்செல்வம், சுந்தீப், வேல ராமமூர்த்தி, ஹரிஷ் பாரதி, சுஜாதா, சுரபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மனு ரவிச்சந்திரன் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார், ராஜசேகர் சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார்.
'ரேணிகுண்டா 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.