

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத்து மற்றும் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ள நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆக.28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.