22 வருட திரை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ரவி மோகன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
22 வருட திரை பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ரவி மோகன்!
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எம் குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி, உனக்கும் எனக்கும் ,சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

நடிகர் ரவி மோகன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகன் அவரது 34-வது படமாக கராத்தே பாபு என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ரவி மோகன் தன்னுடைய 22 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதனை கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கராத்தே பாபு படத்திற்கு சாம் சி.எஸ். இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com