

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று பாரதிராஜா காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த தொலைநோக்குச் சிந்தனையாளர்களில் ஒருவரை இழந்துவிட்டது.
பாரதிராஜாவின் திரைப்படங்கள் மக்களையும், உணர்வுகளையும், வாழ்க்கையின் அழகையும் கொண்டாடின. திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு காலத்தால் அழியாதது, அவரது தாக்கம் அளவிட முடியாதது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.