ரத்னம் : 'செகண்ட் சிங்கிள்' நாளை வெளியீடு

இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரத்னம் : 'செகண்ட் சிங்கிள்' நாளை வெளியீடு
Published on

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.

இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்த பாடல் அமைந்தது. ரசிகர்களிடம் இந்த பாடல் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'செகண்ட் சிங்கிள்' நாளை வெளியிடப்படும் என தயாரிப்பு குழு அறிவித்து உள்ளது. இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com