கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்- வைரலாகும் புகைப்படம்

ரம்யா பாண்டியன், சினிமாவுக்கு அறிமுகமாக இவரது இடுப்பே காரணம் என்றால் மிகையாகாது. ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
கடற்கரையில் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்- வைரலாகும் புகைப்படம்
Published on

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகரான ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவர் சினிமாவுக்கு அறிமுகமாக இவரது இடுப்பே காரணம் என்றால் மிகையாகாது. ஏனென்றால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் டிரெண்டானது.

இதன் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானார். பின்புதான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 2015-ம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.

அதில் இறுதிவரை தாக்குப்பிடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலர் ஆனார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்து இன்று செம்ம பிஸியான தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன், மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டிக்கு ஜோடியாக நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் மோசமான தோல்வியை தழுவியது.

இவர் அடுத்ததாக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'இடும்பன்காரி'. இந்த படத்தில் இதற்க்கு முன் இவர் நடித்த படங்களின் கதாபாத்திரத்தை விட, வலுவான ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிடுவதை அவர் தவிர்விப்பதில்லை. அந்த வகையில் தற்போது கடற்கரையில் அவர் பிங்க் கலர் உடையில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் ஆயிரக் கணக்கான லைக்குகளை பெற்று வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com