

ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை.30ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது.
இப்படம் அடுத்த தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சூர்ப்பனகை பாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். டிரெய்லரில் அவர் இடம்பெற்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு எது உத்வேகம் அளித்தது என ரகுலிடம் ரசிகை ஒருவர் கடிதம் மூலம் கேட்டிருந்தார்.
ரகுல் எக்ஸ் பக்கத்தில் அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார்.
அதில், சூர்ப்பனகையின் கதாபாத்திரத்தின் சிக்கலான தன்மையே தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் கூறினார். வரலாறு அவரை ஒரே ஒரு சம்பவத்திற்காக மட்டுமே நினைவில் வைத்திருக்கிறது, ஆனால் அவரது கதையில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.
பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு சவால் விடும் கதாபாத்திரங்களில் நடிப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக ரகுல் கூறினார்.
படம் வெளியான பிறகு, பார்வையாளர்கள் சூர்ப்பனகையின் கதாபாத்திரத்தை ஒரு புதிய கோணத்தில் புரிந்துகொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.