ஜுன் மாதம் தொடங்கும் பிரேமலு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவானது பிரேமலு திரைப்படம். திரைப்படம் உலகளவில் 130 கோடி ரூபாய் வசூலித்தது.
ஜுன் மாதம் தொடங்கும் பிரேமலு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்
Published on

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவானது பிரேமலு திரைப்படம். இந்த படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். கிரிஷ் மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஒரு இளம் காதலர்கள் மத்தியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையில் வைத்தி திரைப்படம் அமைந்தது. திரைப்படம் உலகளவில் 130 கோடி ரூபாய் வசூலித்தது.

விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக படக்குழு முன்னதாகவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகளை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் திரைப்படத்தை இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்போவதாகவும் படத்தில் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com