பவன் கல்யாணை சீண்டியதால் தெலுங்கில் திரைப்பட வாய்ப்பை இழக்கும் பிரகாஷ்ராஜ்

பவன் கல்யாண் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பவன் கல்யாணை சீண்டியதால் தெலுங்கில் திரைப்பட வாய்ப்பை இழக்கும் பிரகாஷ்ராஜ்
Published on

தமிழ், தெலுங்கில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர துணை முதல்-மந்திரியும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனால் தெலுங்கு படங்களில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பவன் கல்யாண் சகோதரர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் உள்பட அந்த குடும்பத்தில் இருந்து பலர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகர்களாக இருக்கிறார்கள். இதனால் பிரகாஷ்ராஜை அவர்கள் ஒதுக்குவதாக பேசப்படுகிறது.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''சமூகத்தில் தவறு நடந்தால் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எனக்கு சினிமா வாய்ப்புகள் தெலுங்கில் கிடைக்காது என்ற நிலை வந்தாலும், நான் கேள்வி எழுப்புவதை நிறுத்தவே மாட்டேன்.

என் மகன் மரணம் அடைந்தபோது வேதனையில் இருந்து என்னால் மீள முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து மீண்டும் எழுந்து சாதாரண மனிதனாக மாறினேன்.

எனது திறமையை பார்த்து ரசிகர்கள் ஆதரித்தார்கள். அவர்கள் அன்பினால்தான் நான் இன்றும் நடிகனாக நீடித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com