

சாய் அபயங்கர் இசையில் பிரம்மாண்டமான திருவிழா பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பாடல், துடிப்பான கொண்டாட்ட உணர்வை அளிக்கும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கர’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஓம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ‘ஓம்’ படம் அக்டோபர் மாதம் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
இதற்கிடையே, ‘ஓம்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ் நடனம் ஆடுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையில் பிரம்மாண்டமான திருவிழா பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல், துடிப்பான கொண்டாட்ட உணர்வை அளிக்கும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது.
தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.