ஜூன் 19-ல் வெளியாகும் ‘நூறு சாமி’

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
ஜூன் 19-ல் வெளியாகும் ‘நூறு சாமி’
Published on

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன், லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘நூறு சாமி’ படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் தெலுங்கிலும் வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com