நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ திரைப்படம் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

‘ஏமாற்றாதே... ஏமாறாதே!’ என்ற சுவாரசியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ConCityOnNetflix
Published on

கடந்த ஜூன் 26 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற 'கான் சிட்டி' திரைப்படம், வரும் ஜூலை 24-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிஜிட்டல் முறையில் நேரடியாக வெளியாகிறது.

விறுவிறுப்பான கதைக்களம்:

அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ‘ஏமாற்றாதே... ஏமாறாதே!’ என்ற சுவாரசியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் சமூகத்தில் நடக்கும் பண ஏமாற்று வேலைகள் மற்றும் கிரைம் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் மற்றும் காமெடி பாணியில் இயக்குனர் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

நடிகர்களின் பங்களிப்பு:

'கைதி', 'மாஸ்டர்' மற்றும் 'அநீதி' ஆகிய திரைப்படங்கள் மூலம் தனது அசாத்தியமான கம்பீரக் குரலாலும், தனித்துவமான நடிப்புத் திறனாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அர்ஜுன் தாஸ்.

அதேபோல் தமிழில் வெளியான 'கொட்டுக்காளி' திரைப்படங்கள் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றவர் அன்னா பென்.

இவர்கள் இருவரது மாறுபட்ட கூட்டணியில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளதால், சினிமா வட்டாரத்தில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

இத்திரைப்படம், தியேட்டர்களில் நல்ல வசூலையும் விமர்சனங்களையும் பெற்றது.

ஜூன் 26 தியேட்டர் ரிலீஸின் போது இப்படத்தைக் காணத் தவறியவர்களுக்காகவும், சினிமா பிரியர்களுக்காகவும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த ஓடிடி வெளியீட்டை ஜூலை 24 அன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com