கேரள கோவிலில் குடும்பத்துடன் நயன்தாரா

நண்பகல் பூஜையில் பங்கேற்ற நயன்தாரா கோவிலில் நடந்த அலங்கார பூஜைக்காக தனது பெயரிலும், கணவர் விக்னேஷ் சிவன் பெயரிலும் கட்டணம் செலுத்தி பூஜையில் பங்கேற்றார்.
கேரள கோவிலில் குடும்பத்துடன் நயன்தாரா
Published on

நடிகை நயன்தாரா சினிமாவில் பிசியான பணிகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் வெளிநாடு சுற்றுலா மற்றும் பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலாவும் சென்று வருகின்றனர்.

அந்த வகையில் நயன்தாரா தனது கணவருடன் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சக்குளத்து காவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

நண்பகல் பூஜையில் பங்கேற்ற நயன்தாரா கோவிலில் நடந்த அலங்கார பூஜைக்காக தனது பெயரிலும், கணவர் விக்னேஷ் சிவன் பெயரிலும் கட்டணம் செலுத்தி பூஜையில் பங்கேற்றார்.

நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். கோவிலில் தரிசனம் செய்த படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com