பாரதிராஜாவின் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் - மோகன்லால் இரங்கல்

'தொடரும்' திரைப்படத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்தது நான் என்றென்றும் போற்றி பாதுகாக்கும் பொக்கிஷமாகும்.
பாரதிராஜாவின் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் - மோகன்லால் இரங்கல்
Published on

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று பாரதிராஜா காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மண்ணில் கவிதையையும், மௌனத்தில் உண்மையையும், ஒவ்வொரு காட்சியிலும் ஆன்மாவையும் கண்டறிந்த ஒரு இயக்குனர். 'தொடரும்' திரைப்படத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்தது நான் என்றென்றும் போற்றி பாதுகாக்கும் பொக்கிஷமாகும்.

பாரதிராஜா கலைப்படைப்புகள் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com