சுரேகாவின் சர்ச்சை பேச்சு: ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்-நடிகை அமலா

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோரிக்கை விடுத்த அமலா.உண்மையே இல்லாமல் பேசியது வெட்கக்கேடானது.
சுரேகாவின் சர்ச்சை பேச்சு: ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்-நடிகை அமலா
Published on

நடிகை அமலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு பெண் அமைச்சர் பேயாக மாறியது. தீய கற்பனைகளை குற்றச்சாட்டுகளாக கற்பனை செய்து வெளியிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அமைச்சர் மேடம், என் கணவர் (நாகார்ஜூனா) பற்றி ஒரு துளிகூட வெட்கமோ உண்மையோ இல்லாமல் பேசியது வெட்கக்கேடானது.

தலைவர்கள் தங்களை சாக்கடையில் தாழ்த்திக் கொண்டு குற்றவாளிகளைப் போல் நடந்து கொண்டால், நம் நாட்டின் கதி என்ன?" என்றார்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோரிக்கை விடுத்த அமலா, "ராகுல்காந்திஜி, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டால், தயவுசெய்து உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி, எனது குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டு உங்கள் அமைச்சரின் விஷமத்தனமான அறிக்கைகளைத் திரும்பப் பெறச் செய்யுங்கள்" என்று அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com