குருவாயூர் கோவிலில் காதலனை கரம்பிடித்தார் மீரா நந்தன்

திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். எளிய முறையில் நடந்துள்ள திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குருவாயூர் கோவிலில் காதலனை கரம்பிடித்தார் மீரா நந்தன்
Published on

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை மீரா நந்தன். சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் மலையாளத்தில் 2007-ம் ஆண்டு ஒளிபரப்பான 'வீடு' என்கிற தொடரில் தான் முதன் முதலாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு மலையாள படமான 'முல்லா' படத்தில் நடித்தார்.

பின்னர், 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வால்மீகி' திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஆதியுடன் இணைந்து 'அய்யனார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த மீரா நந்தன் கடந்த ஆண்டு வெளிவந்த 'ஜெஸ்னா' எனும் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை மீரா நந்தனுக்கும் அவரின் காதலரான பியூ ஸ்ரீஜு என்பவருக்கும் இன்று காலை குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

எளிய முறையில் நடந்துள்ள திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் மீரா நந்தனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com