மார்வெலின் அடுத்த மெகா ஹிட் ரெடி-'பிளாக் பேந்தர் 3' அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

முந்தைய இரு பாகங்களை இயக்கிய 'ராயன் கூக்ளர்' மீண்டும் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
Black Panther 3
Published on

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பிளாக் பேந்தர் 3' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சான் டியாகோ காமிக்-கான் ஹால்-ஹெச் நிகழ்வில் வெளியிட்டுள்ளது.

புதிய பிளாக் பேந்தர்:

இத்திரைப்படம் வருகிற '2028-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி' உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மறைந்த முன்னணி நடிகர் சாட்விக் போஸ்மேன் நடித்த 'டீ-சாலா' கதாபாத்திரத்தின் வளர்ந்த மகனாக பிரபல ஆங்கில நடிகர் 'டேவிட் ஜான்சன்' நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவரே அடுத்த தலைமுறை பிளாக் பேந்தராகப் பொறுப்பேற்கிறார்.

முந்தைய இரு பாகங்களை இயக்கிய 'ராயன் கூக்ளர்' மீண்டும் இத்திரைப்படத்தை இயக்குகிறார். லெட்டிஷியா ரைட் மற்றும் வின்ஸ்டன் டியூக் ஆகியோர் மீண்டும் தங்களது முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் முழுமையாக '70mm IMAX' கேமரா வடிவில் உருவாக்கப்பட உள்ளது.

வகாண்டாவின் அடுத்த வாரிசு:

2022-இல் வெளியான 'பிளாக் பேந்தரில், வகாண்டா ஃபாரெவர்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், டீ-சாலா மற்றும் நகியாவிற்கு பிறந்த இளம் மகன் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது 3-ஆம் பாகத்தில் அவர் வளர்ந்து, வகாண்டாவின் புதிய பிளாக் பேந்தராக உருவெடுக்கும் கதையாக இது அமையும்.

அவெஞ்சர்ஸ் தொடர்புகள்:

2027-இல் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' திரைப்படத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

சாதனை வரலாறு:

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பிளாக் பேந்தர் முதல் பாகம் உலகளவில் சுமார் ரூ.10,000+ கோடி வசூல் செய்து, சிறந்த படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரையைப் பெற்ற முதல் சூப்பர்ஹீரோ திரைப்படமாக வரலாறு படைத்தது. தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு வெளியான 'வகாண்டா ஃபாரெவர்' உலகளவில் $859 மில்லியன் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com