

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகும்‘துடக்கம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'டைஸ் ஐரே' என்ற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா-வை மோகன்லால் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.
ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் விஸ்மயா நடித்துள்ள முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு, 'துடக்கம்' எனப் பெயரிடப்பட்டது.
பிளாக்பஸ்டர் திரைப்படமான '2018' ஐ இயக்கியவர் இந்த ஜூட் ஆண்டனி.
இந்த படத்தில் விஸ்மயா மோகன்லாலுடன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி, சாய்குமார், சித்திக், மனோஜ் கே. ஜெயன் மற்றும் ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தாமஸ் ஸ்காரியா என்ற ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஜோமோன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்ய, சாமன் சாக்கோ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற விஸ்மயா, இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் சொந்தமாக நடித்துள்ளார்.
பெங்களூரு, குட்டிக்கானம் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது
‘துடக்கம்’ படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், துடக்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.