மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: 'வாரணாசி' படத்தின் 'ருத்ரா' லுக் வெளியீடு!

ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
Mahesh Babu
Varanasi Movie
Published on

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படத்தின் மிரட்டலான 'பர்ஸ்ட் லுக்' புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இத்திரைப்படத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் முற்றிலும் மாறுபட்ட முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் மகேஷ் பாபு, இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலி - மகேஷ் பாபு பிரம்மாண்ட கூட்டணி

'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘வாரணாசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேசத் தரத்தில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் பாணியில் இப்படம் உருவாகி வருக்கிறது.

அடர்ந்த காடுகளில் ‘ருத்ரா’

தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில், பின்னணியில் ஒட்டகச்சிவிங்கிகள் நிற்க, மகேஷ் பாபு மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

காடுகளுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ஆராய்ச்சியாளராக அவர் இப்படத்தில் வலம் வரவுள்ளார் என்பதையும் இந்தத் தோற்றம் உறுதிப்படுத்துகிறது.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரிலீஸ் தேதி

இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து முன்னணி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

முழுக்க முழுக்க ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் 3D வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com