லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய படம்: கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா!

"இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம்"
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய படம்: கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா!
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் 'First Copy' மாடலில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தை, சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம்ப் திரைப்படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கவுள்ளார். சமூக கருத்துக்களை மையமாகக் கொண்ட படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட விஷால் வெங்கட், இந்தப் புதிய படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகை ரெஜினா கசாண்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பல மொழித் திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்றுள்ள ரெஜினா, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.

இதனுடன், சமூக வலைதளங்களில் #AA23 என்ற ஹேஷ்டேக் குறிப்பிடப்பட்டுள்ளதால், படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் படப்பிடிப்பு தொடக்க தேதி இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com