

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளப் படம் ‘டிசி’. இப்படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக.7ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், இதன் இசை ஆல்பம் 24ம் தேதி வெளியானது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் (ஜூலை.30) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2026 கேன்ஸ் திரைப்பட விழாவில் இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.