லாகூர் 1947 : சன்னி தியோலுடன் மீண்டும் இணைந்த ப்ரீத்தி ஜிந்தா

நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்கிறார்.ப்ரீத்தி சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
லாகூர் 1947 : சன்னி தியோலுடன் மீண்டும் இணைந்த ப்ரீத்தி ஜிந்தா
Published on

அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் வரலாற்று இந்தி திரைப்படம் ''லாகூர், 1947 '.சன்னி தியோல், ராஜ்குமார் சந்தோஷி மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் இந்தப் படத்திற்காக முதன்முறையாக இணைந்துள்ளனர்.

,நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்னி தியோல் - ப்ரீத்தி ஜிந்தா ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இருவரும் போர்ஸ், தி ஹீரோ , பையாஜி சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர் .

இந்த படத்தில் நடிப்பது தொடர்பான புகைப்படங்களை ப்ரித்தி ஜிந்தா இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பு செட்களில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படத்தின் 'கிளாப் போர்டு' அதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியுடன் செல்பி எடுத்த படம் அவர் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் இப்படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ப்ரீத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தில் மேலும் மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அலி பசல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இப்படம் மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com