20 நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கியது ‘கருப்பு’ திரைப்படம்

"2026ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக கருப்பு கொண்டாடப்பட்டு வருகிறது"
"Karuppu is being celebrated as the blockbuster
Published on

நடிகர் சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படம் கடந்த மே 15ம் தேதி வெளியானது. வெளியாகி 20 நாட்களை கடந்துள்ள நிலையில், படத்தின் தினசரி வசூல் சற்று குறைந்திருந்தாலும், உலகளாவிய வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தகவல் படி, ‘கருப்பு’ திரைப்படம் 20 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.297 கோடி வசூல் செய்து, ரூ.300 கோடி மைல்கல்லை எட்டும் நிலையில் உள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

ஆரம்ப வாரங்களில் வலுவான வசூலைக் குவித்த படம், தற்போது மூன்றாவது வாரத்திலும் நிலையான வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் வசூல் வேகம் குறைந்தாலும், சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ரசிகர்களின் ஆதரவு தொடர்வதால், படம் இன்னும் சில நாட்களில் ரூ.300 கோடி உலகளாவிய வசூலைத் தாண்டும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. 2026ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக கருப்பு கொண்டாடப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com