கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’!

படம் திரையரங்குகளில் செப்டம்பர் 25ம் தேதி வெளியாக உள்ளது.
கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’!
Published on

இயக்குதர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 10வது படத்திற்கு டோரதி என பெயரிடப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், 2026 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சென்டர்பீஸ் பிரிவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மாஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் எனவும் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக்.,

“எனது பத்தாவது திரைப்படம் 'டோரதி'. கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான, பல ஆண்டுகளாக நான் உருவாக்க விரும்பிய ஒரு கதை இப்போது இறுதியாகப் படமாகியுள்ளது... அதுவும் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில்!

மேலும், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக அளவில் திரையிடப்பட இப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்... 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

எப்போதும் போல ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இம்முறை எங்கள் 'டோரதி'க்காக இன்னும் சற்று அதிகமாகவே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com