தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டார்

கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார்.அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டார்
Published on

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிவராஜ்குமார். கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் சிவராஜ்குமார் தற்பொழுது தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு ஜாவா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரவி அரசு இயக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த 'ஈட்டி' மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஐங்கரன்'ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சிவராஜ்குமார் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com