Kalki part 2 | அமிதாப் பச்சனுடன் வில்லனாக மோதும் கமல்ஹாசன்

கல்கி 2898 கி.பி. இரண்டாம் பாகத்தில் இரு நடிகர்களும் இணைந்து நடிக்க உள்ளனர்.
Kamal Haasan–Amitabh Bachchan reunite after 40 years in Kalki 2898 AD Part 2
Published on

1985ஆம் ஆண்டு இந்தியில் உருவான கெரஃப்தார் படத்தின் மூலம் நடிகர்கள் கமல் ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்தனர்.

இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இன்ஸ்பெக்டராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இந்த நிலையில் 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் இந்த கூட்டணி முதல் பாகத்தை தொடர்ந்து “கல்கி 2898 கி.பி.” இரண்டாம் பாகத்திலும் இணைந்து நடிக்க உள்ளனர்.

வில்லன் கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடிக்கும் முக்கிய காட்சிகளை ஹைதராபாத்தில் படக்குழுவினர் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், “நடிப்பு என்பது ஒருபோதும் உங்கள் சக நடிகரை மிஞ்சுவது அல்ல. ஆனாலும் ஊடகங்கள் சக நடிகர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதை விரும்புகின்றன” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com