பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் உயிரிழப்பு - கமல் ஹாசன் இரங்கல்

ஜாகிர் உசைன் நான்கு முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஜாகிர் உசைன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் உயிரிழப்பு - கமல் ஹாசன் இரங்கல்
Published on

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தவர் ஆவார். நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜாகிர் உசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் நான்கு முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜாகிர் உசேனுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பதிவில் அவர், "ஜாகிர் பாய், அவர் சீக்கிரமே சென்றுவிட்டார், எனினும், அவர் தனது கலையின் மூலம் விட்டுச் சென்றவை மற்றும் அவர் நமக்கு கொடுத்த பொன்னான காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.நன்றி," குறிப்பிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com