ஜெயம் ரவி புதிய படம் - இயக்குனர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி

ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார்.பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி புதிய படம் - இயக்குனர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரதர் திரைப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இவருடன் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு, பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்த படங்களின் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக ஜெயம் ரவி , கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் படம் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது சூர்யா 44 திரைப்படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்பராஜ். அதை முடித்துவிட்டு ஜெயம் ரவி திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கார்த்தி சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com