தந்தை பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு!

சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் ஜூலை. 31 வெளியாக உள்ளது.
தந்தை பட இயக்குநருடன் ஜேசன் சஞ்சய் சந்திப்பு!
Published on

நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஹெச்.வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இச்சந்திப்பின்போது, இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் மாறவேண்டும் என சஞ்சய்க்கு வினோத் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சிக்மா

ஜேசன் சஞ்சய் தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக வினோத்தை சஞ்சய் சந்தித்தாரா அல்லது ஜன நாயகன் தொடர்பாக சந்தித்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com