மூன்றாவது முறையாக திருமணம் செய்ய உள்ளாரா அமீர் கான்?

"அமீர் கான் ஏற்கனவே ரீனா தத்தா மற்றும் கிரன் ராவ் ஆகியோருடன் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார்"
Is Aamir Khan going to get married for the third time?
Published on

பாலிவுட் நடிகர் அமீர் கான், தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் மிகவும் எளிமையாகவும், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பட்ட நிகழ்வாகவும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

61 வயதான அமீர் கான், கடந்த ஆண்டு தனது 60-வது பிறந்தநாள் விழாவில் கௌரி ஸ்ப்ராட்டை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார். இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் இருந்து வருவதுடன், கடந்த ஒரு ஆண்டாக குடும்பமாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான கௌரி ஸ்ப்ராட், அழகு மற்றும் ஃபேஷன் துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது, மும்பையில் ஒரு சலூன் நிறுவனத்தை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. அமீர் கான் ஏற்கனவே ரீனா தத்தா மற்றும் கிரன் ராவ் ஆகியோருடன் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார்.

தற்போது, மூன்றாவதாக கௌரி ஸ்ப்ராட்டை அவர் திருமணம் செய்ய உள்ளார். எனினும், இந்த திருமணம் தொடர்பாக அமீர் கான் அல்லது கௌரி ஸ்ப்ராட் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com