'இங்க நான் தான் கிங்கு'பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்

படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகி உள்ளது.
'இங்க நான் தான் கிங்கு'பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
Published on

ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் புதிய படத்தில் நடிக்கிறார்.

வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து 5-வதாக சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்ட பொருட்செலவில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த புதிய படத்தை இயக்குனர் என்.ஆனந்த் இயக்கி வருகிறார். பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கும் பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். தம்பி ராமையா, விவேக் பிரசனா, முனிஷ் காந்த், பாலசரவணன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகி உள்ளது. இந்நிலையில் படத்துக்கு 'இங்க நான் தான் கிங்கு' என பெயர் வைக்கப்பட்டது. படத்தின் டைட்டிலையும், பர்ஸ்ட் லுக்கையும் நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

இந்த படம் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com