அந்த அறிவாளிகள் பற்றி கவலை இல்லை - பாபி சிம்ஹா

இந்தியன் 2 வசூல் ரீதியாக இந்த படம் தொடர்ந்து அசத்தி வருகிறது.எல்லோருமே தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அறிவாளிகள் பற்றி கவலை இல்லை - பாபி சிம்ஹா
Published on

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் "இந்தியன் 2." இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருப்பினும், வசூல் ரீதியாக இந்த படம் தொடர்ந்து அசத்தி வருகிறது.

இந்தியன் 2 படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவது குறித்த கேள்விக்கு, அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த பாபி சிம்ஹா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "எல்லோருமே தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நல்லா இருக்கு என்றால் அதை நல்லா இருக்குனு சொன்னால் நம்மை முட்டாளா நினைத்துக் கொள்வார்கள் போன்று, ஏதோ நொட்டு சாக்கு சொல்லணும் என்று ஏதோ ஒன்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அந்த அறிவாளிகளை பற்றி நாம கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை ஆடியன்ஸ். ஃபேமிலி கிரவுடு வருது. நமக்கு அதுதான் தேவை. அறிவாளிகள் தேவை இல்லை," என்று கூறி உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com