மீண்டும் நயன்தாரா மற்றும் அஜித் நடிப்பில் திரைப்படம் இயக்க ஆசை - விஷ்ணுவர்தன்

விஷ்ணுவர்தன் தற்பொழுது இயக்கியுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகை நயன்தாரா வெளியிட்டார்.
மீண்டும் நயன்தாரா மற்றும் அஜித் நடிப்பில் திரைப்படம் இயக்க ஆசை - விஷ்ணுவர்தன்
Published on

விஷ்ணுவர்தன் தற்பொழுது இயக்கியுள்ள திரைப்படம் 'நேசிப்பாயா'. நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகை நயன்தாரா வெளியிட்டார். தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் பற்றி இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியதாவது:-

ஆகாஷ் மற்றும் சினேகா இருவரும் என்னை முதலில் சந்தித்தபோது பாலிவுட்டில் ஷெர்ஷா படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு படத்தை இயக்க முடிவு செய்தேன். நேரில் பார்க்கின்ற ஆகாஷ்க்கும் திரையில் பார்க்கும் ஆகாஷ்க்கும் சம்பந்தமே இருக்காது. முதல் படம் என்று சொல்ல முடியாத அள வுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். படத்தில் ஆகாசுக்கும் அதிதி சங்கருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வந்துள்ளது.

இது முழுக்க முழுக்க காதல் டிராமா படம். இளைஞர்களை கவரும் வகையில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் ஜோடி புத்துணர்ச்சியுடன் திரையில் தெரிகின்றனர். ரொமான்டிக் ஆக்ஷன் படமாக நேசிப்பாயா உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து உங்களது நெருங்கிய நண்பர்களான அஜித் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து புதிய படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, இருவரையும் சேர்த்து பில்லா படத்தை கொடுத்தேன். அதே போன்று ஒரு படத்தில் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விரைவில் அது நடக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com