எனக்கு கல்யாணம் பண்ண விருப்பமே இல்ல - ஐஷ்வர்யா லட்சுமி

தற்பொழுது மலையாளத்தில் ஹலோ மம்மி என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் அவரது பூங்குழலி கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
எனக்கு கல்யாணம் பண்ண விருப்பமே இல்ல - ஐஷ்வர்யா லட்சுமி
Published on

விஷாலுடன் ஆக்சன் மற்றும் ஜகமே தந்திரம், கட்டாகுஸ்தி ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் படத்தில் அவரது பூங்குழலி கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தற்பொழுது மலையாளத்தில் ஹலோ மம்மி என்ற திரைப்படத்தின் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தாயார் விருப்பத்திற்கிணங்க இணைய தளம் ஒன்றில் எனது சுய விபரங்களை பதிவிட்டேன். சிறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. பல்வேறு சூழ்நிலைகளை பார்த்தும், பலரது திருமண வாழ்க்கையையும் பார்க்கும் போது எனக்கு திருமணம் செய்யும் ஆசையே வெறுத்து விட்டது. மகிழ்ச்சியே இல்லாத பலரின் திருமண வாழ்க்கையின் முடிவை பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். இதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் திட்டமே இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com