நான் உங்களுடைய பெரிய ரசிகன்.. விரைவில் பணியாற்றுவோம் - சாய் பல்லவியை புகழ்ந்த மணி ரத்னம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
நான் உங்களுடைய பெரிய ரசிகன்.. விரைவில் பணியாற்றுவோம் - சாய் பல்லவியை புகழ்ந்த மணி ரத்னம்
Published on

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பங்கேற்றனர்.

பல சுவாரசியமான விஷயங்கள் இசை வெளியீட்டு விழாவில் நடைப்பெற்றது. இயக்குனர் மணி ரத்னம் பேசுகையில் " நான் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் இணைந்து ஒரு நாள் பணியாற்றுவேன் என நம்புகிறேன் என்றார்.

அதற்கு சாய் பல்லவி " நான் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் எனக்கு பல இயக்குனர்களின் பெயர் தெரியாது. ஆனால் சினிமாவில் எனக்கு தெரிந்த ஒரே இயக்குனரின் பெயர் அது மணி ரத்னம் தான்.இன்று வரை நான் எனது கதாப்பாத்திரங்களையும், படக்கதைகளையும் தேர்ந்தெடுப்பதற்கு மிக முக்கிய காரணம் மணி ரத்னம் சார் தான் " என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com