மீண்டும் சினிமா நடிப்பில் எச்.ராஜா

ஒரு டாக்டராக நான் ஆஸ்பத்திரியில் பல வாழ்க்கைகளையும், பல உணர்வுகளையும் நேரில் பார்த்திருக்கிறேன்.
செய் செய்யாதே படத்தில் நடிக்கும் எச்.ராஜா
செய் செய்யாதே படத்தில் நடிக்கும் எச்.ராஜா
Published on

இந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு பார்வையாளரும் ஆரோக்கியம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி.

பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ‘கந்தன் மலை’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘செய் செய்யாதே’ என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். ஹரினி சுப்பு, சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ளார். டாக்டர் எஸ்.ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கி உள்ளார்.

படத்தில் கதாநாயகனாக குரு விஜய் நடித்துள்ளார். எச்.ராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் தர்ஷினி ரெட்டி, டபிதா குணரத்தினே, மோனிகா பிரீத்திவி, பிரதீஷா மனோ பிரசாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் டாக்டர். எஸ். ராஜா கூறியதாவது:-

ஒரு டாக்டராக நான் ஆஸ்பத்திரியில் பல வாழ்க்கைகளையும், பல உணர்வுகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்களை வெறும் மருத்துவத் தகவல்களாக அல்லாமல் மக்கள் மனதில் எளிதாகப் பதியும் வகையில் சினிமா மூலம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் செய் செய்யாதே திரைப்படத்தை உருவாக்கத் தூண்டியது.

இந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு பார்வையாளரும் ஆரோக்கியம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com