ஜி.வி.பிரகாஷின் 'இம்மார்டல்' படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு!

இம்மார்டல் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
GVPrakash - Kayadu Lohar
Published on

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் பான்- இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் 'இம்மார்டல்' திரைப்படத்தின் 'She Is My' என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'She Is My' காதல் மெலடி

மாரியப்பன் சின்னா எழுத்து மற்றும் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகப் பிரபல நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார்.

சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள 'She Is My' என்ற இரண்டாவது சிங்கிள் பாடல், ரசிகர்களைக் கவரும் வகையில் ஒரு சிறந்த மெலடி பாடலாகத் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

செப்டம்பரில் ரிலீஸ்

அருண்குமார் தனசேகரன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

திங்க் மியூசிக் நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ளது. 'இம்மார்டல்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

2வது சிங்கிள் நாளை மாலை வெளியாகும் நிலையில், இப்பாடலின் போஸ்டர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com