ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பகத் பாசில்

பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'.திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பகத் பாசில்
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'. இப்படத்தை ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கினார். இப்படம் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.150 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

சமீபத்தில் பகத் பாசிலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது மட்டுமல்லாமல் பகத் பாசில் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், வயநாட்டில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பகத் பாசில் ரசிகர்களைச் சந்தித்தார். இது குறித்தான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். நடிகர் விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இதில் பகத் புதிய தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இத்தோற்றம் அடுத்த படத்திற்கான லுக்காக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com