தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடிக்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on

தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் சுட்ட கதை, நளனும் நந்தினியும் மற்றும் முருங்கக்கா சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தயாரிப்பு பணிகள் மட்டுமல்லாலல் யூடியூபில் படங்களை விமர்சித்தும் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னதிரை பிரபலமான மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிகள் மீது நெட்டிசன்கள் வன்மத்தையும், மகாலட்சுமி பணத்திற்காகத்தான் இவரை திருமணம் செய்துக் கொண்டார் என கமெண்டுகளை பதிவு செய்து வந்தார்கள். ஆனாலும் இது எந்த விதத்திலும் ரவிந்தர் மற்றும் மகாலட்சுமி வாழ்க்கையை பாதிக்கவில்லை.

இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது . சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடிக்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com