“வெறுப்புக்கு நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் இலக்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” - ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் அறிவுரை

ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் அல்லு அர்ஜூன்.
“வெறுப்புக்கு நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் இலக்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” – ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் அறிவுரை
Published on

AAFA Annual Summit 2026 நிகழ்வில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றிய Icon Star அல்லு அர்ஜுன், நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்க்கையில் முன்னேறுமாறு அறிவுரை வழங்கினார்.

"பிடிக்காதவர்களை வெறுப்பதற்கோ, ட்ரோல் செய்வதற்கோ உங்கள் நேரத்தில் 1% கூட வீணாக்காதீர்கள். உங்கள் இலக்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள். என் மீதும் என் கலை மீதும் நீங்கள் காட்டி வரும் அன்பிற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்," என்று அவர் உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

அவரது இந்த உரை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அன்பு, நன்றியுணர்வு மற்றும் நேர்மறை சிந்தனையை வலியுறுத்தும் செய்தியாக அமைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com