DNA படத்தின் Feelingu Paatu இன்று மாலை வெளியீடு

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது.
DNA படத்தின் Feelingu Paatu இன்று மாலை வெளியீடு
Published on

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். அந்த வகையில் படத்தின் சில பாடல்கள் இதற்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான பீலிங் பாட்டு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com