இயக்குநர் பாரதிராஜா மறைவு: நடிகை குஷ்பு இரங்கல்

அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் பலராலும் விரும்பி மதிக்கத்தக்க மாபெரும் இயக்குநரை திரையுலகம் இழந்துள்ளது.
இயக்குநர் பாரதிராஜா மறைவு: நடிகை குஷ்பு இரங்கல்
Published on

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார்.

நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது.

அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது. இதனையடுத்து நடிகை குஷ்பூ இரங்கல் தெரிவித்தார்.

1993-ல் வெளியான இயக்குனர் பாரதிராஜாவின் ' கேப்டன் மகள்' எனும் அதிரடித் திரைப்படத்தில் நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் திரைப்பட உருவாக்கத்தில் ஒரு சிறந்த அளவுகோலாக பாரதிராஜாவின் படங்கள் விளங்கியுள்ளன. மேலும் அவரது படங்கள் இனிவரும் காலங்களிலும் திரைப்பட உருவாக்கத்திற்கு ஒரு அடிப்படையான பள்ளிக்கூடம் போல திகழும்.

ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை பாரதிராஜா விட்டுச் சென்றுள்ளார். இரட்டை ஜடை போட்டபடி குஷ்பூவை வைத்து ஒரு படம் எடுப்பதா அடிக்கடி பாரதிராஜா கூறுவார். இனி அது நிறைவேறாத கனவானது.

அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் பலராலும் விரும்பி மதிக்கத்தக்க மாபெரும் இயக்குநரை திரையுலகம் இழந்துள்ளது என்றும் தனது X தளத்தில் பதிவிட்டு நடிகை குஷ்பூ இரங்கல் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com