தனுஷ் வழக்கு: நயன், விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயந்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ் வழக்கு: நயன், விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை:

நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டு கடந்த 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

முன்னதாக ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகள் முன் அனுமதி இல்லாமல் இடம் பெற்றுள்ளதாகவும் இதற்கு இழப்பீடாக ரூ.10 கோடி கேட்டும் நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதை கண்டித்து தனுஷ் மீது நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தனுஷ் எதிர்ப்பை மீறி கடந்த 18-ந்தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் நயன்தாராவுக்கு எதிராக தனுசின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com