டிமான்ட்டி காலனி 3 படத்தின் வேலை தொடக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
டிமான்ட்டி காலனி 3 படத்தின் வேலை தொடக்கம்
Published on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்தனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இரண்டாம் பாகத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்கு லீட் கொடுத்து தான் முடித்திருப்பார்கள். படக்குழுவும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தது. படத்தின் ப்ரீ ப்ரொடகஷன் வேலைகள் நடந்துக் கொண்டு இருந்த நிலையில் தற்பொழுது அஜய் ஞானமுத்து அவரது படக்குழுவுடன் யூரோப்பில் இருந்து ஒரு செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.

இப்படம் ஜப்பான் உள்பட வெளிநாடுகளில் படப்பிடிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com