

இந்த நிலையில், கங்குவா படத்தை தயாரித்து இருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்க வாங்கிய ரூ. 99 கோடியே 22 லட்சம் கடனில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, வாங்கிய பணத்தை கொடுக்காமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
இதையடுத்து, வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார். கங்குவா திரைப்படம் ஏற்கனவே ரிலீசாக இருந்த நிலையில், ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேதியில் கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்பது நாளை தெரிந்து விடும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.